Sunday, July 19, 2009

கேள்வி பதில்

என் நண்பர்களுக்காக..

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...




சுப்பிரமணி




எதையாவது சொல்லி கூப்பிட வேண்டும் என்பதால் வந்தது...மேலும் பிறந்த பொழுது என் அப்பாவிற்கு பதவி உயர்வு கிடைத்து அக்கௌண்டில் மணி (பணம்) நிறைவாக இருந்தது...ஆகவே அந்த மணியை என் பெயரில் கோர்த்து

இந்த பெயரை சூட்டினர்



கையில் மணி இல்லை என்றாலும் பெயரில் மணி இருப்பதால் கொஞ்சம் பிடிக்கும்





2. கடைசியாக அழுதது எப்போது..?

இயல்பாக இதை நினைவு வைத்து கொள்வதில்லை...

எனினும் நண்பர்களுக்காக எதையும் மறுப்பதில்லை...




நந்தலாலா படத்தில் யேசுதாஸ் பாடிய ஒண்ணுகொண்ணு துணையிருக்கு பாடலை கேட்ட போது.....




3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என்னுடைய தலை எழுத்தை தவிர எல்லா எழுத்தும் பிடிக்கும்.




4.பிடித்த மதிய உணவு??..

பூண்டு ரசம்.. சாப்பாடு...

சாமி படம் பார்த்த பிறகு தயிர் சாதம்.....மாவடு சேர்ந்து விட்டது...

ஆனால் இன்னும் ஒரு மாமி தான் சேர வில்லை.....




5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே வம்பு தான் சார் !....



6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

எங்கே குளித்தாலும் சளி தான் எனக்கு பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்??

அவர் பெண் தானா என்பதை



8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது பைத்தியம் (நண்பர்கள் மேல்)

பிடிக்காதது ரௌத்திரம் (சிலர் மேல்)



9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..

எதையும் முழுதாக விரும்பிகிறவன் நான்.....

பாதியின் மீது நாட்டமில்லை...



10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது... அப்துல் கலாம் முதல் பில் கேட்ஸ்

வரை....



11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

வெள்ளை, கருப்பு



12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?..

என் மேனேஜர் என்றென்றும் என்னை திட்டும் பாட்டை தான்


13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

வர்ணப் பேனாவாக மாறி சொர்ணக்கா கூடையா சண்ட போட போறேன், ஏங்க காண்டு ஆக்கறீங்க




14.பிடித்த மணம்?

சத்தியமாக திருமணம் இல்லைங்க


15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?
பிரபா, தங்கம்... சும்மா கலாய்க்கலான்னு தாங்க...



16. பிடித்த விளையாட்டு?...


பச்சை தண்ணிய குடிச்சிட்டு பல்லு குத்தறது..



17. கண்ணாடி அணிபவரா?


இல்லை. உடைப்பவர்.



18.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?...


எனது நண்பர் சாமுவேல் தூங்காமலிருக்கும் திரைப்படம்...



19.கடைசியாக பார்த்த படம்?..


.hangover comedy



20.பிடித்த பருவ காலம் ?...


என்னோட இறந்த காலம்



21.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?


சில்வர் லைட்



22.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


வேறு ப்ரொஜெக்டில் மாற்றும் வரை



23.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சத்தம் மொத்தம் பிடிக்கும்



24. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


காண்டு ஆக்காதீங்க சார்...பெங்களூர் நண்பர் சாமுவேல் வீடு தான்


25.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?


ரொம்ப பொறுமைங்க


26.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?


அட பார்ரா....வறுமை தாங்க..


27. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


மறுபடியும் பார்ரா...கொழுப்பு தாங்க


28.உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?


என் வீடு


29.எப்படி இருக்கணும்னு ஆசை ??..

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்

30.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ??


சன்யாசம் தான்



31. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க? ...


சவால்